“peer pressure” = இணக்க நெருக்கடி
Peer pressure என்று வழங்கும் ஆங்கிலச்சொல்லுக்குத் தக்கசொல் “இணக்க நெருக்கடி”.
தன்னுடன் இருப்போரிடம் இணங்கி நடக்க ஏற்படும் நெருக்கடி இணக்கநெருக்கடி.
“இப்பொழுதெல்லாம் இணக்கநெருக்கடியாலே கல்லூரி மாணவர்கள் தாம் தமிழர்கள் என்பதையே மறைக்கமுயல்கின்றனர்”
“இணக்கநெருக்கடி பகட்டைப் பெருக்கி உளைச்சலைக் கூட்டும்”
“இணக்கநெருக்கடியை வெல்லவே மாணிக்கவாசகர் உலகமே தன்னைப் பேயென்று சிர்க்க அந்தப்பழிச்சொல்லையே அணிகலனாகப் பூண்பேன் என் நெறியினின்று கோணமாட்டேன் என்று போற்றித் திருவகலில் முழங்குகிறார்”
அந்தத் திருவாசகச் சொற்களைக் கீழே காணலாம்.
http://www.shaivam.org/siddhanta/thivacha1_u.htm#dt02
நாமும் அந்தச் சான்றோன் உணர்த்திய நற்கொள்கைப்படி செந்தமிழ்நெறியை இக்கால இணக்க்நெருக்கடிக்காக விட்டுக்கொடாமல் நிலைநிற்போமாக.
கயிலாயமலையின் பழைய பெயர்
ஒட்டக்கூத்தர் பாடிய தக்கயாகப்பரணி என்னும் நூலில் கயிலாயமலைக்குப் பள்ளி என்னும் பெயர் இரண்டுதடவை வழங்குகின்றது.
“பள்ளிக்குன்றும் விற்குன்று மொழிய” (தக்கயாகப்பரணி. 536). என்று பாடுகிறது அங்கே.
சென்னைப் பல்கலைத் தமிழகராதி அதற்குக் கைலாச பருவதம் என்றே பொருள்சொல்கிறது:
பள்ளிக்குன்று: . Mt. Kailās; கைலாச பருவதம். பள்ளிக்குன்றும் விற்குன்று மொழிய (தக்கயாகப். 536).
பள்ளிவெற்பு : பள்ளிக்குன்று. பள்ளிவெற்பின் மாறுகோள் பெறாது (தக்கயாகப். 371).
இந்தச் சொல்லுக்கும் கயிலாயத்திற்கும் என்ன தோதென்று திகைக்கிறது. நாம் பள்ளி என்ற சொல்லின் இக்காலப்பொருள்களைக் கொண்டு ஏதாவது சிவனின் இருப்பிடம் என்று சொல்லலாம். ஆனால் அது வெறும் பாமரமானமுயற்சியேயாகும். அதன் தோற்றம் புதைந்துபோய்விட்டது.
இது தமிழர்கள் (பழந்திராவிடர்களாக) மிகப்பழங்காலந்தொட்டுக் கயிலாயம்போன்ற மலைகளுக்குத் தொடர்புள்ளவகையில் வாழ்ந்து அதற்கான பழஞ்சொல்லைப் போற்றியுள்ளதைக் காட்டுகிறது.
மேலும் குன்று என்பது சிறிய மலையைக் குறிக்கும் என்பதும் இதில் பொய்படுகிறது. குன்று என்றால் வெறும் மலை என்பதே பொருள் என்றும் அறிகிறோம்.
Background: பிற்புலமும் வரலாறும்
Background என்பதற்கு எல்லாநிலைகளிலும் பிற்புலம் அல்லது பிற்புலம் என்பது இப்பொழுது பெருகிவருகிறது.
ஆனால் அதுவும் ஒரு ஆங்கிலச் சிந்தனைப்பெயர்ப்பாகும்; அதாவது ஆங்கிலச்சொல்லை அது குறிக்கும் கருத்தை நேரடியே பெயர்க்கும் பிழையாகும்.
எடுத்துக்காட்டாக:
“இதை அவருடைய பிற்புலம் தெரிந்தால்தான் முழுதும் உணரமுடியும்” என்றுசொல்வதில் காணலாம்
அது “”One can realize this only if one knows his background” என்பதைச் சொல்லமுயல்கிறது. அது செயற்கையாக ஒலிப்பதைப் பலரும் உணரக்கூடும். ஏனென்றால் பிற்புலம் என்பது இந்த நிலைமைக்கு இயல்பான தமிழ்க்கருத்து அன்று; இதையே வேறுவகையில் சொல்லிவந்திருக்கிறோம்; இன்றும் ஆங்கிலத் தொடர்பில்லாதவர்கள் வேறுவகையில் சொல்லுவார்கள். அதை மறந்து போய் ஆங்கிலச்சொல்லை நேரடியாக மொழிபெயர்த்ததால் விளைந்த விளைவு மேற்கண்ட வாக்கியம்.
இதை முழுதும் உணர ஆங்கிலச்சொல்லை ஆராய்வோம்.
background என்னும் ஆங்கிலச் சொல் பொதுவாக இரண்டு பொருள்களில் வழங்கும்.
(1) இடம்தொடர்பான பொருள்
(2) ஆட்களுக்கோ சிலநிகழ்ச்சிகளுக்கோ இதுவரை நேர்ந்தது
http://www.answers.com/topic/background
- The ground or scenery located behind something.
-
- The part of a pictorial representation that appears to be in the distance and that provides relief for the principal objects in the foreground.
- The general scene or surface against which designs, patterns, or figures are represented or viewed.
- The circumstances and events surrounding or leading up to an event or occurrence.
- A person’s experience, training, and education: Her background in the arts is impressive.
முதலிரண்டும் பிற்புலம், பின்னணி ஆகிய பொருள் கொண்டவை. பின்னவை அப்படியில்லை. அவை இதுவரை நடந்துள்ளதைப்பற்றிச் சொல்லும் குறிப்புடையவை. அவற்றை உணர்த்தத் தமிழ்மொழியில் ஆங்கிலச் சொல்லை நேரடியாகப்பெயர்த்தால் சிறக்காது. பொருளை உணர்ந்து ஏற்கனவே தமிழ்மொழியில் உள்ள சொல்லைச் சொல்லவேண்டும். அது வரலாறு, வரல்முறை போன்ற சொற்களால் அமையும்.
ஆகவே “his background” என்பதற்கு அவருடைய வரலாறு என்று சொல்லவேண்டும்.
ஆனால் “படம்பிடிக்கும்பொழுது அழகான பிற்புலம் தேவை” என்பது தகும்; ஏனென்றால் அது உண்மையான பொருள்களின் இடம் சார்ந்த கருத்து.
“One can realize this only if one knows his background” = “அவருடைய வரலாறு தெரிந்தால்தான் இதை முழுதும் உணரமுடியும்”
“I would like to describe in this essay the background to the genocide of Tamil Eelam”
“ஈழத்தாருக்கு இழைத்த இனப்படுகொலையின் வரலாறு என்னவென்று இந்தக் கட்டுரையில் தெரிவிக்க விரும்புகிறேன்”.
மேலும் ஆங்கிலத்திலும் முடிந்தவரை நேரடிப்பொருளுடைய சொற்களை வழங்குவது நமக்கும் நல்லது.
இயலும் வரை background என்ற சொல்லுக்கு ஈடாக history என்ற சொல்லை வழங்கினால் சிறக்கும்.
ஆங்கிலத்தில் சட்டென்று எந்தச்சொல்லையும் இன்னொரு பொருளுக்குச் சார்த்திச் சொல்லும் வழக்கம் உள்ளதால் சொல்லினோசை மட்டும் ஒத்திருக்கும்; ஆனால் குறிப்பு வெகுவாக மாறியிருக்கும்.
ஆனால் தமிழ்மொழியிலோ மற்ற உலகமொழிகளிலோ அப்படிச் செய்ய இசைவதில்லை ; அதெபோல் தமிழ்மொழ்யிலிருந்து எல்லாச்சொல்லையும் பச்சையாக ஆங்கிலத்துக்கும் பெயர்க்கமுடியாது; பொருளுணர்ந்துதான் செய்யமுடியும்; இல்லாவிட்டால் மாறுபட்டு ஒலிக்கும். இப்படி எண்ணிப்பார்க்காமல் மொழிபெயர்த்தால் நம்முடைய ஆராயும் திறமையையும் போக்கிவிடும்.
Meat Eating in Valmiki Ramayana
There are a significant number of passages in Valmiki Ramayana where the principal characters used meat in their religious rites and daily diet. Here are some of the passages with original quotes. It was meat that would not be acceptable today to a typical Hindu. It included wild boar (wild pig) and reptile meat (mangoose or varamus)!
Please note that the Tamil poet Kamban (around 11th century CE) completely sanitizes his Ramayana from meat diet for these characters. So much so that the first thing Rama utters when he scolds Sita after defeating Ravana is “ஊன் திறம் உவந்தனை” (“you enjoyed meat eating”) and scolds her again a few verses later as having eaten the bright flesh of beings. Shows how much values had changed in the intervening thousand years and caused imbalance in the value system resulting in the loss of priorities.
Onto the Valmiki passages:
- Sita promising Ganga meat-rice on safe return:
From Ayodhya Kandam:52: As Sita crosses Ganga she promises to Ganga what she will offer on safe return: “thousand pots of spirituous liquor and jellied meat with cooked rice (basically briyani)”
http://www.valmikiramayan.net/ayodhya/sarga52/ayodhya_52_frame.htm
suraaghaTasahasreNa maamsabhuutodanena cha |
yakshye tvaam prayataa devi puriim punarupaagataa || 2-52-89
89. devii= “Oh, goddess! Upaagata= After reaching; puriim= the city (Ayodhya); punaH= again; yakshhye= I shall worship (you); suraaghata sahasreNa= with thousand pots of spirituous liquor; maamsa bhuutodanena cha = and jellied meat with cooked rice; prayataa= well-prepared for the solemn rite.”
“Oh, goddess! After reaching back the city of Ayodhya, I shall worship you with thousand pots of spirituous liquor and jellied meat with cooked rice well prepared for the solemn rite.”
- Lakshmana and Rama hunting deer and wild boar (wild pig):
Then on reaching the other shore Rama and Lakshmana hunt four types of animals including wild boar, antelope, spotted antelope and another species of antelope and take their flesh and hurry in hunger to a tree as it was getting dark. Also makes one wonder how much meat they ate in one go as it is too much for three adults even for warriors.
This is the last sloka in the same chapter as above:
tau tatra hatvaa caturaH mahaa mR^igaan |
varaaham R^ishyam pR^iSatam mahaa rurum |
aadaaya medhyam tvaritam bubhukSitau|
vaasaaya kaale yayatur vanaH patim || 2-52-102
102. hatvaa= having killed; tatra= there; chaturaH= four; mR^igaan= deer (namely); varaaham= Varaaha; R^ishyam= Risya; pR^ishhatam= PR^isata; mahaaruru= (and) Mahaaruru; (the four principal species of deer); aadayaa= and taking; tvaritam= quickly; medhyam= the portions that were pure; tou= Rama and Lakshmana; bubhukshhitou= being hungry as they were; yayatuH= reached; vanaspatim= a tree; vaasayaa= to take rest; kaale= in the evening.
Having hunted there four deer, namely Varaaha, Rishya, Prisata; and Mahaaruru (the four principal species of deer) and taking quickly the portions that were pure, being hungry as they were, Rama and Lakshmana reached a tree to take rest in the evening.
- Sita telling Ravana in the disguise of a Brahmin that Rama will bring back deer, reptiles and wild boar for meal:
From Aranya Kandam: The different types of meat Sita offers to the Brahmin guest (in which disguise Ravana is) once Rama brings them from his hunt. Note Deer, Wild Boar and a reptile (உடும்பு?) are offered.
samaashvasa muhuurtam tu shakyam vastum iha tvayaa || 3-47-22
aagamiSyati me bhartaa vanyam aadaaya puSkalam |
ruruun godhaan varaahaan ca hatvaa aadaaya amiSaan bahu || 3-47-23
22b, 23. muhuurtam samaashvasa= for a moment, be comfortable; tvayaa iha vastum shakyam= by you, here, to take rest, possible; me bhartaa= my, husband; ruruun= stag with black stripes; godhaan= mongooses like [civet-like mammals of the family Viverridae, esp. of the genus Herpestes, Marathi manguus]; varaahaan ca= wild-boars, also; hatvaa= on killing; bahu amiSaan aadaaya= aplenty, meat, on taking; puSkalam vanyam aadaaya= plentiful, forest produce, on taking; aagamiSyati= will be coming [soon.]
“Be comfortable for a moment, here it is possible for you to make a sojourn, and soon my husband will be coming on taking plentiful forest produce, and on killing stags, mongooses, wild boars he fetches meat, aplenty. [3-47-22b, 23]
- Ravana was in the guise of a Brahmin (dvija):
saH tvam naama ca gotram ca kulam aacakSva tattvataH |
ekaH ca daNDakaaraNye kim artham carasi dvija || 3-47-24
24. dvija= oh, Brahman; saH tvam= such as you are; naama ca gotram ca kulam ca= name, also, parentage, also, caste, also; tattvataH aacakSva= in actuality, make mention of; ekaH ca= lonesomely, also; daNDaka araNye in Dandaka, forest; kim artham carasi for what, reason, you wander.
“Such as you are, oh, Brahman, you may make mention of your name, parentage and caste, in their actuality. For what reason you are wandering in Dandaka forest lonesomely?” Thus Seetha questioned Ravana. [3-47-24]
So the upshot of all this is that having forgotten all this modern Hindus overreact to people from other religions eating pig meat or reptile meat as if they were strange animals or demons and bias their interreligious attitudes in a very negative way. We have seen that even Brahmins of Valmiki’s days (about 2000 years ago) took it normally and so modern association of vegetarianism with Brahmins is much later.
For a solid book on how meat eating including beef eating thrived in Vedic period and continued much later see D.N. Jha’s “The Myth of the Holy Cow” which was originally banned by the BJP administration.
Tamil Script Reform: Its Vacuity Next to The Chinese Script
This is about the push for reforming the Tamil script as advocated by V C Kulandaisamy (there the video link is listed in the middle of the page. Another direct link is here ).
Since I wrote this blog a few days ago, apparently it has been taken up for consideration by the TN Govt.
You will realize at the end of this that this reform proposal is a typical case of a solution looking for a problem.
Now, those who push for the reform of the Tamil script keep saying that children will learn the language quicker with the simplified script and so one can effectively increase the literacy rate.
- But Richard Sproat a linguist says this (at the bottom of the quoted text): “Finally, there is a common belief that if one wants to increase literacy in a society, it helps to make the writing system simpler. Commonly cited examples are Korean Hangul and Chinese character simplification. I will argue there is no basis for this belief. Indeed it is rather simple to show that while literacy rates correlate well with a number of socio-economic factors, the correlation between literacy rates and the complexity of the writing system is effectively zero.”
Now, to see that there is absolutely no need for this reform we must first think of the Chinese languages (note the plural).
- The Chinese languages which are a group of mostly mutually unintelligible languages and spoken in Mainland China and Taiwan have a script that has many tens of thousands of symbols with no uniform scheme. There is no definite number known for its count! Some dictionaries list as many as 106,000+ symbols!
- The writing system requires at least a few thousand symbols to be learnt for normal fluency.
- They are not at all language-based scripts like other languages of the world. They are a mixture of pictures and sound suggestions (yes just a suggestion not a full indication of each and every sound making up a word).
- They learn everything including advanced technology using books in Chinese script/languages only.
- Even in the internet arena, Google’s CEO Schmidt estimates Chinese becoming the most dominant language of the internet in about five years.
- Now the Chinese people whether Mainland, Hong Kong or Taiwan are much more advanced in most economical, technological and political aspects. Mainland China is dreaded with respect by the world and pandered to by special trade and political privileges. They have launched satellites, test nuclear warheads and explore the moon. Taiwan is economically advanced and exports all kinds of modern devices and technology.
- There is an argument given by Tamil script reform proponents regarding Chinese: that the Chinese script was reformed and simplified to suit practical use. It was very limited and some of the more ambitious simplifications were rescinded. It is vacuous to keep citing that as a model as the fact still remains that the Chinese script has maintained its complexity mentioned above: It still has no serious relation to the sound details of the spoken language and thousands of symbols to learn for a decent fluency.
- Japanese script is also similar to Chinese in many aspects and nobody has to argue how advanced they are. So the issue is not language script but it is how much a language and the speakers of that language are respected by its own people in all walks of life. That is the only way to strengthen ourselves not by tampering with the language.
- So with the Tamil script, with its one-to-one sound correspondence and with only dozens of symbols, cannot be said to be in a critical state for reform in any sense of the word. This reform proposal is just an engineering fantasy to tinker with things.
- So this is a typical case of a solution looking for a problem…That is, somebody thought “Hey we can after all simplify the script further and what fun it will be to see it implemented!” and so proposes an imaginary problem to justify his itch to throw a wrench…
Next consider English even though it has a phonetic script.
- It is highly irregular in spelling and pronunciation. It is actually many times more difficult to teach English language reading and writing than Tamil language if one measures the level of fluency of reading and writing in the same objective way. But we dare not tinker with the English language. Why? because we have determined subconsciously out of our deep inferiority complex that English is superior and is not to be questioned hence not negotiable and that the ‘weak and poor’ (ஊருக்கு இளைத்த) Tamil is the one to change.
- But the poor Tamil language subordinate as it is deemed to be shall ever be ready to stand in obeyance to change itself to suit the whims of the confused elite.
- After all they do not care about the loss of heritage and only about living for the moment earning their livelihood using English.
- These people will not rest with their tinkering until Tamil language becomes transformed into English (or in the most generalized sense the dominant language of the time, who knows Hindi, Spanish or Chinese!).
Coming to Hindi, its script is called Devanagari the same as the one used for Sanskrit.
- Hindi/Sanskrit’s Devanagari script is one of the most irregular in the Indian subcontinent which can be understood immediately by anyone who knows Hindi or Sanskrit (Marathi and Gujarati are similar). It has complex symbols for various combinations of consonants and is very difficult to type set, create fonts and type in computers compared to Tamil. Actually the reason Tamil language had the first ever modern book published in the 1800s was that it had the most regular (or linear) script and was an easy job. It is still true when compared with other languages such as Telugu/Kannada or Hindi/Sanskrit etc. So why this false alarm about difficulties in computerization or learning of Tamil script only?
A very important negative effect it will have on cultural and religious matters:
- There are so many precious Tamil religious works that will be destroyed by this reform. A very important example is the old Vaishanavite commentaries by Periyavacchan Pillai பெரியவாச்சான் பிள்ளை) and others on Thivviyap Pirapantham. These are voluminous and are extremely prized by Vaishnavites as they are their lifeline to the Azhwar’s songs. If such works are ever reprinted they are always printed from photocopies as it is extremely expensive and time consuming to type set again. Imagine them now in the era of a reformed script: they cannot be simply photocopied and reprinted en masse but have to be manually typeset. Forget about it…Vaishnavites can write off their religious life line as lost for ever. It will become now so much more difficult to produce well-read religious leaders.
- Similar is the case with Thevarm, Thirumantiram, Thiruvacakam and other important works. Not to forget arcane philosophical works in such fields as Saiva Siddhantha.
- Other areas affected are: books in Siddha medicine and astrological works such as Pulippani (புலிப்பாணி).
What about the claims that it is very easy to republish books in the new script in this modern age?
- When the switch over the new script is starts, the whole Tamil publishing industry will have to keep itself busy just to republish/reprint earlier books and materials in the new script. Note that this means manual work in typesetting. Only those that are in computer format can probably be mechanically moved. But still the point is that even then the industry will be busy with this republishing work. Not with publishing new ideas and creations.
- What this means is that instead of having to simply publish additional new 10,000 books with new content per year as usual, now the industry has to schedule republishing the hundreds of thousands of old books and material published in the current script. This is an enormous burden on a society that is already unable to keep up with the ideas and creations in other languages of the world. Now it is burdening itself with a headache brought on by its own bad judgment which was avoidable in the first place.
- Also since the new script will look so much different and publishers will have to deal with the practical issues of catering to two different segments of the society with two different scripts.
- In addition to constant project management and content production problems for publishers, this is bound to result in a clear generation gap.
- There will be so much so money and effort wasted.
In addition to the very serious loss of readability of publications on Tamil literature, history and cultural elements, we need to convey very strongly the economic and practical devastation it will wreak on the poor and weak segments of the society.
- It will again be the poor Tamil medium students who will be affected as they are the ones who will be distracted from their staple language for all subjects. Any previously published guide books in all walks of education such as computing, engineering, science or vocational subjects such as motor winding or engine repair or cell phone repair in current Tamil script will be rendered useless. And as for reprinting them, with the perceived economic unattractiveness of publishing in the Tamil language hardly anyone will readily republish them in the new script so soon and in such large numbers and they may be practically lost for a generation or more.
- This is a really serious situation. English medium ones will get affected only to the extent that their Tamil language subject book might change. But for Tamil medium students it will be the whole world that will be changed.
- However from what has seen reported widely, except for the students graduating from good quality schools and with good aptitude for English, many English medium students also resort to Tamil text books for understanding technical subjects. A Vice-Chancellor of a Tamil Nadu university who brought out a computer programming language text book for some language like C++ or Java said it was sold out unexpectedly as even those with English medium schooling also bought them! After all many type-writing class rooms were converted into Matriculation schools in every nook and corner of Tamil Nadu and you cannot expect more than this from the graduates of those schools.
- We cannot let these unfortunate students be used as guinea pigs in a very foreseeably disastrous socio-linguistic experiment by some misguided engineers.
- So what we need is from Sproat’s statement is a better socio-economic system to increase literacy rate. What these students need is a better quality schooling from the government in languages such as Tamil and English and other subjects. English as an important career language needs to be taught using a totally changed curriculum that views English as a second language (ESL). Current curriculum uses the methods put in place by the English colonial rulers using the curriculum for native English speakers. This means that we throw out appreciation of English literature as a goal of English education and replace it with sufficiency for modern technical, business and social communication. Actually with this revamped curriculum parents will stop being wrecked financially by having to admit their children in English medium schools and employment rate of Tamils will increase many fold.
- Citing that diaspora Tamil children can learn the language faster is absolutely nonchalant given the equally great nonchalance of many diaspora parents vis-a-vis the Tamil language from the fact that many see the Tamil classes in North America as a place teach spoken language so their kids can communicate with their grandparents! These diaspora parents have no greater goals with the language proficiency. For Tamil Nadu students it is their livelihood that is affected not just fun in the living room with their grandparents.
- Moreover we all know that many of these diaspora kids learn additional languages such as Spanish, German and Latin at school. So how come suddenly Tamil alone becomes so difficult with its very normal script a big obstacle? The real reason is again the low value placed on it by the parents. There has been no complaint from parents so far about this at all to any teachers. The script alone will make only a very small difference in the time to learn. Language is more than this and vocabulary and grammar and fluency take most of the time.
- So please let us treat this as a classical language not as a tourist language!
- Some of the senior educationists who are involved in this reform proposal would instead do much better to focus on making Tamil language an economically viable language by making high-school-level proficiency in it a requirement for admission to Tamil Nadu’s colleges especially professional programs. Then Tamil language will be respected and learnt properly by the students. Until then it will be tinkered with by a process that will not rest till it transforms into the dominant language of the time which today is English.
- As I joke with many on this: Even if God gave the boon to Tamils that they can get instant fluency in the Tamil language if the just think a few moments about it there will be few takers. Such is the value attached to the language so script simplification will not help as the fundamental problem is with the value attached to the language not with any difficulties allegedly inherent in the script or the language.
Also citing that the script has always changed is not valid at this juncture. What I mean is that:
- Previously all education in Tamil Nadu meant firstly fluency in Tamil language, literature and grammar. Then any education was also using treatises in Tamil language whether music, dance, ship building, architecture or mathematics (கணக்கதிகாரம் is a famous Tamil math treatise). And all books being in palm leaves had to be transcribed manually by each generation to save the book from being lost to elements or insects. All this ensured continuity of the language and culture. But now it is not so. One can get called educated with zilch knowledge of Tamil language.
- So given the critically dangerously low state of respect for the Tamil language and culture this script reform proposal is coming at the most inauspicious time. When we have come back to the state of respect Tamil language had a hundred years ago we can reform the script to anything we like. But not now.
சங்கப் புலவர்கள் வெறும் புகழ்பாடிகள் அல்லர்!
இணையத்திலே ஒரு இலக்கியக்குழுவில் ஒருவர் சொல்லியது:
“From the time of Sankam Age till now what we are doing is praising others for money, fame, and selfishness.”
அன்பர்களே
மேற்கண்டவாறு பேசும்முன் சங்கப்புலவர்கள் பலர் தாம்சார்ந்த மன்னர் வழக்கத்துமாறான வாய்ப்புகளில் மானம் போன்ற காரணங்களால் செத்தால் அவரோடு செத்ததை மறக்கக்கூடாது.
இந்தச் செய்தியெல்லாம் கடந்த ஐம்பதாண்டுகளாகவே மறந்துபோயுள்ளனர் தமிழர்கள்.
காரணம் மொழியின் பெருமையில் வறட்டுச் சம்பம். மொழியின் இலக்கியம் சொல்லும் கருத்தில் அக்கறையும் அதில் சொல்லும் நிகழ்ச்சிகளில் பாடுபட்ட மாந்தரின் துன்பத்தை உணர்ந்து நடக்கும் எண்ணமும் இல்லாததே காரணம்.
போலி இலக்கியப்பேச்சாளர்கள் வெறும் நயமும் கோமாளிக் கோலமும் கொள்வதால் இது எங்கே புரியும்?
தன் உரு நிறம்கூடக் கிண்டல் என்று நினைக்கும் “பாப” இலக்கியப் பேச்சாளர்கள் இதை எப்படிப் பேசிப் பணம் ஈட்டுவார்கள்?
புறநானூறு படிக்கிறவர்கள் இதையெல்லாம் உணராமல் படிக்க முனைந்தால் வீண்தான்.
அடுத்து அப்படிப்பட்ட புலவர்களைக் காண்போம்:
[தமிழிணையப் பல்கலை தன் நூலகத்தில் நல்ல நூல்களைப் பழைய நல்ல உரையுடன் பொதித்தமைக்கு மிக்க நன்றி]
1. கோப்பெருஞ்சோழன் தன் மகன்கள் தவறாக நடந்ததால் அவர்களோடு போர்பொராமல் வடக்கிருந்து பட்டினிகிடந்து உயிர்நீத்தான். அப்பொழுது அவனோடு பல புலவர்கள் பட்டினி கிடந்து மெதுவாகச் சித்திரைவதைப்பட்டுச் செத்தார்கள்.
பிசிராந்தையார்: இவர் பாண்டிநாட்டிலிருந்து அவனை வாழ்நாளிலே பாராமலேகூடத் தாமும் வடக்கிருந்தார்.
பொத்தியார்: இவருடையது இருப்பதிலேயே உருக்கமானது. சோழனின் அவைப்புலவர். சோழனோடு பட்டினிகிடக்க முனைந்தபொழுது அவரைத் தடுத்துக் குழந்தைபிறந்தபின் வா என்று சொல்லினான்; அவரும் குழந்தை பிறந்தபின்னர் வந்து இடம்தேர்ந்து உயிர்துறந்தார். இவர் என்னத்துக்காகப் பாராட்டுப்பாடிப் பச்சைக் குழந்தையையும் பெண்டாட்டியையும் விட்டுச் சாவார்? காண்க: http://www.tamilvu.org/slet/l1281/l1281pg2.jsp?x=47#220
பூதநாதன்: இவர் கருவூர். அவரும் சோழன்பட்டினிகேட்டு ஓடி வந்து அவன் தன் வள்ளூரத்தை ( தசையை ) வாட்டிக் குற்றுயிராகக் கிடக்கும்பொழுது பார்த்து ஏன் என்னிடம் பேசாமல் இருக்கிறாய்? நான் மட்டும் வடக்கிருக்கும் பலரோடு முதலிலேயே உட்காராததால் கோபப்புலவியோ? என்று ஊடலாகக் கேட்கிறார். இதை இங்கே பார்க்கவும்.
* அங்கே “பலர் நின்குறியிருந்தோர்” என்று சொல்கிறார். எனவே நமக்குத் தெரிந்த இவர்களுக்கு இன்னும் மேலே பலர் செத்தது தெரிகிறது.
2. கபிலர் எத்தனை மன்னர்களைப் பாடியது தெரியும். சேரனிடம் கறிப்பிரியாணி தின்பதொன்றே தனக்குத் தெரியும் போர்தெரியாது என்று பாடினார்.ஆனால் பாரி செத்தபொழுது அவர் அவன் மகளிரை மணம் செய்ய முடியாமல் கோவலூரில் ஒப்படைத்துவிட்டுப் பட்டினி கிடந்து செத்தார்; இதை ஒருவரும் நினைப்பதுண்டா?. சிலர் அவர் தீக்குளித்ததாகச் சொல்வர். இவர் பதிற்றுப்பத்திலே சேரனிடம் பெறாத செல்வமா? பாரி கொடுக்காத நிதியா? கடைசியில் வெந்தோ வாடியோ சாகவாப் போலிப்பாராட்டுகள்?
3. பெருஞ்சேரலாதனோடு செத்தபலர்: கரிகாலனோடு போரில் முதுகில் ஈட்டி வெளிவரவும் அதற்கு நாணிப் பட்டினி கிடந்து செத்த பெருஞ்சேரலாதன் தெரியும். ஆனால் அவனோடு அந்தக் களத்தில் பலர் பட்டினி கிடந்து செத்தது அகநானூற்றுப் பாடல் 55ஆல் தெரிகிறது. அதை வாள்வடக்கு என்றும் சொல்வது அதன் பழைய நெகிழ்ச்சியான மரபையும் காட்டுகிறது.
” கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்
பொருதுபுண் நாணிய சேர லாதன்
அழிகள மருங்கில் வாள்வடக் கிருந்தென
இன்னா இன்னுரை கேட்ட சான்றோர்
அரும்பெறல் உலகத்து அவனோடு செலீஇயர்
பெரும்பிறிது ஆகி யாங்கு” (அகநானூறு: 55: 10-15)
[ பெரும்பிறிது = சாவு]
இதற்குமேல் பேச என்ன இருக்கிறது?
* அவர்களுக்காக அழுவதைத் தவிரவும்
* அப்படியிருந்த நம் குடிக்கு இருக்கும் வலிமை நினைந்து விம்முவதைத் தவிரவும்
* இதை மறந்ததனால் இக்காலக்குடி துரோகம் பெருத்து எப்படி வலிமையிழந்திருக்கிறது என்று நோவதைத் தவிரவும்…
* இனியாவது மீண்டும் நினைந்தால் உருப்படத் தவறாது என்று நம்பிக்கை கொள்வதைத் தவிரவும்….
பெரியண்ணன் சந்திரசேகரன்
வள்ளுவர் சமணராயிருந்தால் என்ன குறை?
திருவள்ளுவர் சமணமதத்தார் என்பதனால் ஏன் நமக்குக் குறை வேண்டும்?
அந்தமதத்திற்கே உரிய ஆனால் எல்லாருக்கும் பொதுவாகப் பொருந்தாத கொள்கையை வற்புறுத்துவதைத்தான் குறையாக நினைக்கவேண்டும்.
கொல்லாமை புலாலுண்ணாமை இயன்றளவு நல்லதென்று தெரிந்ததே.
அதேபோல் இன்றும் நாம் மேலைநாட்டில் விளைந்த தனியுரிமை விடுதலை, அறிவியல், அறிவியல்நோக்கில் மொழியியல் பண்பாட்டு மரபாராய்ச்சி போன்ற மதங்களை ஏற்றுப் பயன்பெறுகிறோம். எனவே நம்முள் ஒருவர் நல்லது சொல்லும்பொழுது ஓ இவர் மேலை மரபினர் என்று எண்ணி வருந்தினால் சிறக்குமா?
மேலும் தமிழர்கள் ஏதோ இன்று இருப்பதுபோல் பண்டைநாளில் மதங்கள் இருந்ததாக நினைக்கிறார்கள். ஆனால் ஈராயிரம் ஆண்டுகள் முன்பு வெவ்வேறு கொள்கைகள் இருந்தன. பலர் ஒரே குடும்பத்தில் சமணம் ஆசீவகம் புத்தம் போன்ற கொள்கைகளைப் பின்பற்றுவார்கல். இதைச் சிலப்பதிகாரம் போன்றவற்றில் காணலாம். கோவலன் கண்ணகிக்குத் திருமணம் மாமுதுபார்ப்பான் மறைவழி காட்டிட நடத்திய பெற்றோர்களில் சிலர் கோவலன் இறந்ததும் வருந்திச் சமண மடத்தில் சேர்ந்தது தெரிந்ததே.
எனவே நாம் மதம் என்ற சொல் கேட்டவுடன் இன்றுபோல் நினைக்கக்கூடாது.
தமிழரில் பலர் எப்படியோ தாங்கள் சைவர் என்ற எண்ணம் கடந்த சில நூறாண்டுகள் பரவியதால் இந்த எண்ணம் நேர்ந்திருக்கலாம். சைவத்தீவிரவாதிகள் சிலப்பதிகாரத்தை அழிக்க முயன்றது தெரிந்ததே. சித்தமரபு நூல்களை அழிக்க முயன்றதும் தெரிந்ததே.
இன்றும் கூடச் சிவத்தீட்சை பெற்றவர் சிலர் சிலப்பதிகாரம் திருக்குறள் எல்லாம் புறக்கணிப்பதைக்காணலாம்; அவர்கள் தமது சைவமரபைத் தொன்றுதொட்டு வேதிய மரபோடு சேர்ந்ததாக நினைப்பதுண்டு. ஆனால் இருக்குவேதம் இலிங்கத்துக்கு எதிரானது என்பதை இவரே அறியார்.
சிவன்கோயிலில் பூசாரிகளாக இருக்கும் வேதியமதத்தாரும் இதை மறந்தனர்.
அது நிற்க.
வள்ளுவரும் இளங்கோவும் சமணராக இருந்தும் கொல்லாமை புலால்மறுத்தலை மட்டுமே வற்புறுத்தித் தமிழ்ப்பண்பாட்டின் முழுக்கருவை மீறாமல் இலக்கியம் பாடியுள்ளனர்.
இளங்கோ ஒருபடிமேலே மிஞ்சித் தம்சமயத்தை முதலில் வற்புறுத்துவதுபோல் பாடிப் பின்னர் அதை மறுப்பதைக் கவுந்தியடிகள் வாயாகக் காணலாம்; சாரணர்கள் முன்னிலையில் அருகன் அல்லது வேறு யாருக்கும் ஐம்புலன்கள் பணிவோடு இணங்கா என்று பேசுவதையும் மாதரியிடம் கண்ணகியை அடைக்கலப்படுத்தும்பொழுதும் பேசுவதையும் ஒப்பிட்டு வேறுபாட்டைக் காண்க; “இத்தெய்வமல்லது பொற்புடைத் தெய்வம்…”
அதுவும் நிற்க.
திருக்குறள் கடவுள்வாழ்த்தில் சொல்லும் கடவுட்குணங்களையும் கொல்லாமை புலால் மறுத்தல் ஆகியவற்றையும் பெரிய சான்றுகளாக வள்ளுவரின் சமண மரபிற்குக்கொள்வர். அதுபற்றிய மறுப்பை அறிந்தவர்கள் இங்கே தெரிவிப்பது பயனுள்ளதாகும்.
மற்றபடி வள்ளுவர் சமணக்கொள்கையைப் புகுத்த முயலவில்லை. தமிழரின் அடிப்படை மதமான அகப்பொருள் மீறாமல் காமத்துப்பாலைப் பாடியிருப்பது மிகச்சிற்பபு. மற்றும் மனிதனின் இரந்தே வாழவேண்டும் என்று மானத்தை மிஞ்சிய கடவுள் பரந்து கெடுக என்பதுவும் வாழ்வாங்கு வாழ்பவனே கடவுள் என்ற மதத்தையும் அவர் தெளிவாக ஓதுவதை மறக்கக்கூடாது,
திருக்குறளின் கொல்லாமையும் புலால்மறுப்புக் கொள்கையும் அது இயற்றிய காலக்கட்டத்திற்கு இருந்த தமிழர் மற்றும் இந்தியப்பொழிலில் வடபாலில் பரவியிருந்த ஆரியவேதியரின் மதம் ஆகியவற்றின் கொள்கைக்கு வேறுபட்டது. உயிர்ப்பலியையே அடிப்படையாகக் கொண்ட ஆரியவேள்விச் சமயம் (யாகம்) தமிழகத்திலும் அப்பொழுது பரவத் தலைப்பட்டதும் சங்கப்பாடல்களில் தெளிவு (அகநானூற்றில் ஆமையைத் தீயில் இடும் ஆரியவேள்விச் சடங்கு நேர்ச்சான்று).
திருமுருகாற்றுப்படையில் முருகனுக்கு ஆட்டுமறியை அறுத்துப் பலிகொடுக்கும் சடங்கு தெளிவாகப் பாடியுள்ளது.
“சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும்“ (திருமுருகாற்றுப்படை)
இங்கே அப்படிக்கொண்டாடும் விழாவைச் சீர்கெழு விழவு அதாவது பெருமைவாய்ந்த விழா என்று கூறுவதைக் கவனிக்கவும்.
இன்னும் மேலே அதே படலத்தில் நக்கீரர்
“மதவலிநிலைஇய மாத்தாட் கொழுவிடைக்
குருதியொடு விரைஇய தூவெள் ளரிசி”
என்றும் பாடுகிறது.
[மிகுந்த வலிமை பெற்ற பருத்த காலடியை உடைய கொழுத்த விடையின் குருதியொடு விரவிய தூய வெள்ளரிசி]
பழைய உரைகாரர்களில் விடை என்பதற்குக் கிடாய் என்று நச்சினார்க்கினியரும், செம்மறிக்கிடாய் என்றும கவிப்பெருமாளும், ஆடு என்று பரிதி யென்பாரும் சொல்லுவர்’; ஆனால் பரிமேலழகர் யானைத்திரள் என்று பொருளுரைக்கின்றார்!
முன்பே சொல்லியதுபோல் ஆரியரின் வேள்விமதமும் எக்கச்செக்கமாக விலங்குகளைப் பலிகொடுப்படுப்பதையே சடங்காகக் கொண்டது. இதைச் சதபதப்பிராமணம் போன்ற வேள்விசடங்குமுறை நூல்களால் அறியலாம். பிராமணர்கள் பசுக்கறியை உண்பதைச் சிறந்த மரபாகக் கொண்டிருந்தது பலருக்கும் தெரியாது. இதை The Myth of the Holy Cow என்ற நூலில் இருந்து நுணுக்கமாகவும் விரிவாகவும் அறிந்துகொள்ளலாம்.
எனவே சமணர்கள் ஒருவர்தாம் கொல்லாமை புலால் உண்ணாமை ஆகியகோட்பாடுகளை அந்தக் காலகட்டத்தில் மேற்கொண்டிருந்தனர் என்பதைத் தெளியலாம். ஆகவே வள்ளுவர் சமணக்கொள்கையைக் கடைப்பிடித்தவராக இருக்கவே வாய்ப்புகள் உண்டு. அதில் யாரும் வருந்தவோ வெறுக்கவோ சான்றுகள் இல்லாமல் உணர்ச்சி அடிப்படையில் மறுக்கவோ தகாது.
Contribute: பங்களிப்பா? உதவியா?
இக்காலத்தில் தமிழர்கள் குழப்பும் இன்னொரு சொல் ஆங்கிலத்தின் contribute என்பது.
இப்பொழுது இந்தச்சொல்லை ஆங்கிலத்தில் முதலில் சிந்தித்துப் பழகியவர்களுக்கு நேரடிமொழி பெயர்ப்பான “பங்களிப்பு” என்பதே சொல்லவருகிறது.
ஆனால் இந்த ஆங்கிலச்சொல்லின் கருத்து உலக மக்களுக்குப் புதிய கருத்தில்லை. என்ன சொல் தமிழர்கள் வழங்குகிறார்கள்?
“உதவு“, “ஒத்தாசை செய்” என்பது பெரும்பாலும் இடங்களுக்குப் பொருந்தும். மற்ற இடங்களில் கொடுத்தல் அளித்தல் என்ற கருத்துப் பொருந்தும்.
“அவன் ஊர் நோன்பின் பொழுது ஒன்றும் உதவவில்லை”
“எங்கள் அணிக்கு அவனால் இது வரைக்கும் ஒரு உதவியும் இல்லை”
என்பதுண்டு.
எனவே “Please contribute to this convention by serving on the organizing committee” என்பதை
” ஏற்பாட்டுக் குழாத்தில் பணிபுரிந்து நீங்களும் இந்த மாநாட்டுக்கு ஏதாவது உதவுங்கள்” என்பது அந்த வழக்கம். ஆனால் “ஏற்பாடு செய்வதில் நீங்களும் பங்களியுங்கள்” என்பது என்பது ஆங்கிலப் பழக்கம்.
கொடுத்தல் என்ற பொருளில் குறிப்பிட்ட ஏதேனும் கொடுப்பதைச் சொல்ல வழங்கலாம். “அவர் நாங்கள் நிதி திரட்டும்பொழுது ஐயாயிரம் வெள்ளி கொடுத்தார்” என்பது
“He contributed $5000 during our fund raising” என்பதை உணர்த்தும்.
இந்த இரண்டாம் பொருளைப் பங்களிப்பு என்ற சொல் குறிக்கும். ஆயினும் அதில் பங்கு என்ற சொல் ஆங்கில வழக்கத்தை மேற்கொண்டதால் விளைந்தது. வழக்கமாகப் பேசுவதுபோல் கொடுப்பது, அளிப்பது என்றே சொல்லலாம்.
Participate: பங்கேற்பா? கலந்துகொள்வதா?
“… இலக்கியக் கூட்டத்தில் உங்களின் பங்கேற்பை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். “
என்பதில் பங்கேற்பு என்று சொல்வதுஆங்கிலச்சொல்லை மொழிபெயர்ப்பதால் விளைந்தது.
திராவிடமொழிகளில் கலத்தல், சேர்தல் என்ற பொருளில் சொற்களை வழங்குவதுதான் தகும்.
முன்பெல்லாம்: “நீங்கள் கட்டாயம் இந்த விழாவில் கலந்து கொள்ளவேண்டும்“, “அவர் கூட்டத்தில் கலந்துகொண்டாரா” என்றெல்லாம் பேசியது நமக்கு நினைப்பிருக்கும். நான் கேட்டு வளர்ந்த கொங்கு வழக்கில் பங்கேற்பு என்ற சொல்லைக் கேட்டதில்லை! பங்கேற்பு என்ற சொல்லைக் கேட்டவுடன் எனக்கே புதிதாக இருந்தது. அது ஒட்டவேஇல்லை.
சான்றாக: மன்னாதிமன்னன் என்ற படத்தில் கீழ்க்கண்ட இரண்டாம் பாகத்தின் கட்டங்கடைசியில் (நேரம் 1:07:40) காவிரிவிழாவில் “கலந்துகொள்” என்று பலமுறை வெவ்வேறு ஆட்கள் பேசுவதைக் கவனிக்கவும்.
http://www.tamilpeek.com/watch.php?vid=624∂=3227
பங்கேற்பு என்ற சொல் தமிழில் இயற்கையாக வழங்கும் சொற்களை ஆங்கிலச்சொல்லைக் கேட்டவுடன் இணைக்க மறந்த எழுத்தாளர்களால் நேர்ந்ததாகும். இதுபோல் பல சொற்களும் சொல்வழக்கக் கோட்பாடுகளும் ஆங்கிலநெறியைத் தழுவியதால் ஏற்பட்டுள்ளன. அவற்றை இங்கே என்னுடைய மற்ற கட்டுரைகளில் காண்க.
Participate என்பதற்கு மற்ற திராவிடமொழிகளில் கூடக் கலத்தல், இணைதல் ஆகிய கருத்துகளில் சொற்கள் வழங்குவதற்குச் சான்றுகள் காணலாம்:
தெலுங்கில்கூட: (http://dsal. uchicago. edu/cgi-bin/ romadict. pl?query= participate&table=brown )
எனயு ( < *எணையு = இணையு) என்ற சொல் வழங்குவதைக் காணலாம்:
enayu. [Tel.] v. n. & a. To seem, to resemble. To mingle. coalesce, unite. To accord. To associate, To participate in, enjoy, or suffer (as death.)
ஆங்கிலத்திலும் அந்தச் சொல்லுக்கு “to join in” என்ற பொருள் இருப்பதை http://en.wiktionary.org/wiki/participate என்ற கட்டுரையிற் காணலாம். எனவே ஆங்கிலத்தில் பல்வேறு கருத்துகளுக்கு ஒரே சொல் வழங்குவதை உணராமல் நாம் அந்த ஒரு சொல்லின் நேரடிப்பொருளைமட்டுமே மொழிபெயர்க்கக்கூடாது.
கலிபோரினியாத் திரு.மு.மணிவண்ணன் தெரிவித்தது: பன்மொழிப்புலவர் கா அப்பாத்துரையார் தொகுத்த கழக ஆங்கிலத் தமிழ் அகராதியிலிருந்து (பேரா. அ. கி. மூர்த்தி திருத்திய பதிப்பு, 2002):
Participate (v): கலந்து கொள்
Participant (n): கலந்து கொள்பவர்
Participation (n): கலந்து கொள்ளல்
ஆக்ஸ்போர்டு ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகராதியிலிருந்து ( பேரா. முருகன், பேரா. ஜெயதேவன் 2009):
Participate (v): to take part or become involved in, ஒன்றில் பங்கு கொள், இணைவுறு, கலந்து கொள்
என்று மற்றவர்களும் கலந்துகொள் என்று சொல்லியிருப்பது யான் சொல்வதைத் திண்ணப்படுத்துகிறது.
எனவே நாம் கவனத்தோடு சிறிது சிந்தித்துப் பார்த்துச் சொற்களை வழங்குவது சிறக்கும்.
பங்கேற்பு என்பது மொழிச்சிதைவு என்ற நோக்கில் பிழையில்லை; செந்தமிழ்மொழிதான்.
ஆனால் மொழியின் சொல்வழக்கு மரபையும் சொற்பிறப்புக்கு அடிப்படையான பொருள்மரபையும் குலைக்கும் என்ற நோக்கில் அது சிறப்பில்லை. தமிழ்மொழி இப்பொழுதுள்ள தறுவாயில் இந்த மரபைக் குலைத்தால் மீளமுடியாத பெரியமாற்றம் நேரும் என்பதை நாம் கருதுவோமாக.
இந்த விழிப்புணர்வு இல்லையென்றால்:
- நம்மொழியின் சொற்கள் வழக்கொழிந்து தொலையும்.
- பல கருத்துகளுக்கு (இங்கே ஆங்கிலத்தில் participate என்ற கருத்திற்கு) அடிப்படைப் பொருள் என்னவென்றே தெரியாமல் போகும். இது அடிப்படைக் கெடுதல் செய்யும்.
- அதன் விளைவாகத் தமிழ்மொழியின் தொடர்ச்சி தொலையும். புதுத்தலைமுறையாக ஒரு மொழி பெருகிப் “பழைய” மொழியின் சொற்களுக்குப் பொருள் விளங்காமல் போகும் பெருத்தகேடு உள்ளது.சங்க இலக்கியத்திற்கும் மற்றவற்றிற்கும் இது ஒரு பெரிய வேறுபாடாகும். (ஆடு = வெற்றி, நகர் = வீடு, கோயில் போன்றவை எடுத்துக்காட்டுகள்)
- தமிழ்மொழியில் புதுச்சொற்கள் வழங்க அடிப்படைக் கருவூலம் என்பதுவும் ஊற்று என்பதுவும் தொலையும்.
- ஆங்கிலேயர் சிந்தனையை மொழிபெயர்ப்பதாகத்தான் இருக்கும். தமக்கே உரிய நினைப்பு என்பது இல்லாமல் போகும்.
“எனவே சென்ற இலக்கியக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்….இன்னின்னார்…” என்று சொல்க!
“நும்நாடு யாதென்றால் தமிழ்நாடு என்றல்” – இளம்பூரணர்
1967-69 யாண்டுகளில் சென்னை மாகாணம் என்று அதற்குமுன் வழங்கிய பெயரைத் தமிழ்நாடு என்று மாற்றப் பெயர்சூட்ட முனைந்த பொழுது சான்றுகள் தேடியபொழுது சிலப்பதிகாரத்தில் காட்டினதாகச் சொல்லுவார்கள். சிலப்பதிகாரத்திலே “இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய இது நீ கருதினையாயின்” (சிலப்பதிகாரம் : வஞ்சிக் காண்டம்) என்று சொல்கிறது.
ஆனால் சிலப்பதிகாரத்தில் மட்டுமேயன்றி மற்ற பழைய உரைகாரர்களில் ஒருவரும் தமிழ்நாடு என்ற சொல்லை வழங்குகின்றார். அது சிலப்பதிகாரத்தின் வழக்கை விட இன்னும் தேற்றமானது. அதைக் காண்போம்.
தொல்காப்பியத்தின் பழைய உரைகாரர்களுள் முந்தியவர் இளம்பூரணர் (கிபி 11-ஆம் நூற்றாண்டு). செப்பும் வினாவும் வழுவாது வருதற்கு “நும் நாடு யாதென்றால் தமிழ்நாடு என்றல்” என்பதை எடுத்துக்காட்டுகின்றார் இளம்பூரணர். அதை “உரையாசிரியர்கள்” என்ற நல்ல நூலில் (1977) அறிஞர் மு.வை.அரவிந்தன் குறிப்பிட்டுத் “தமிழர் வழங்கிய நாட்டைத் தமிழ்நாடு என்று வழங்கிய வழக்கம் அக்காலத்தில் இருந்தது என்பதை அறியும்போது எல்லையற்ற மகிழ்ச்சி பிறக்கிறது” என்கிறார்.
இது அன்றைய தமிழகம் மூவேந்தர்களும் வேளிர்போன்ற சிற்றரசர்களும் ஆண்டதால் ஆட்சிதான் பிளவுபட்டிருந்ததே தவிர தாம் தமிழர் என்ற ஓரினத்து அடையாளம் பிளவுபடாமல் தெளிவாக வாழ்ந்ததைக் காட்டுகின்றது.
சங்கக்காலத் தமிழர் கூட்டணி: மேலும் சங்கக்காலத்தின் முற்பகுதியிலே தமிழர்கள் வடபுலத்து மன்னர்களின் படையெடுப்பிலிருந்து தமிழகத்தைக் காக்க 113 யாண்டுகளாவது கூட்டணியாகக் கூடியிருந்ததைக் காரவேல என்னும் கலிங்கமன்னனால் தோராயம் கிமு 175-ஆம் ஆண்டிலே பொறித்த அத்திகும்பாக் கல்வெட்டிலே தெரிகிறது. கமில் சுவெலெபில் (1989) அதைக் கொண்டு தமிழர்களின் கூட்டணி கிமு 288ஆம் யாண்டிலே தொடங்கியிருக்கவேண்டும் அது மோரிய மன்னன் பிந்துசாரன் தமிழகத்தைக் கைப்பற்ற முனைந்தகாலமாய் இருக்கவேண்டுமென்றும் கணிக்கிறார்.
மேலும் சிலப்பதிகாரத்திலே வஞ்சிக்காண்டத்தில் வடபுலமன்னர்களான கனக விசயர்களை தோற்றோடும் காட்சியை “அரியில் போந்தை அருந்தமிழ் ஆற்றல் தெரியாது மலைந்த கன விசயரை” நீர்ப்படைக்காதை (189-190) என்று பாடுகிறது; அஃதாவது “அழிவில்லாத பனைமாலை சூடிய அருந்தமிழர் ஆற்றல் அறியாது போரிட்ட கனகவிசயரை” (அல்லது “பனைமாலை சூடியஅருந்தமிழ்வேந்தன் ஆற்றலை அறியாது …” என்றும் வேங்கடசாமி நாட்டர் உரை). எப்படியாகினும் பனைமாலை சூடிய சேரரும் தம்மை வெறுமனே சேரர் என்று மட்டும் கருதாது அதனினும் பெரிய பொதுவாகிய தமிழர் என்ற குடியின அடையாளத்தோடு (national identity) எண்ணி வாழ்ந்தனர் என்று தெற்றெனத் தெரிகிறது.
இதனை இந்தியா என்பதோடு ஒப்பிடவேண்டும். இந்தியா என்று ஒரு நாடோ குடியோ இனமோ ஆங்கிலேயரின் ஆட்சிக்கு முன்னர்க் கிடையாது. யாரும் தம்மை இந்தியர்/பாரதர்/பாரதீயர் என்று அழைத்துக்கொண்டதில்லை. இந்தியா என்பதை அயிரோப்பாப் போல் ஒரு பலப்பல மொழியினங்கள் நாடுகள் சேர்ந்த கண்டமே ஆகும். ஆததால்தான் அதனை இந்தியத் துணைக்கண்டம் என்பார்கள். புகழ்வாய்ந்த வரலாற்று அறிஞர் துவி.நாராயண சா (D.N.Jha) என்பாரின் “இந்து அடையாளத்தின் மறுவாய்வு” (Rethnking Hindu Identity) என்ற நூலில் இது தொடர்பாகப் பலசெய்திகளை விரிவாகக் காணலாம்.
1947-இலே படைத்த இந்திய நாட்டுக்கு அதன் பெயர் இந்தியக் குழுமியம் (யூனியன்); மற்றபடி இந்தியக்குடியரசு என்றாகிய பின்னும் இந்திய அரசியற் சட்டம் இன்னும் இந்தியக் குழுமியம் என்றே சொல்கிறது. நேற்றுத்தோன்றிய ஓர் அடையாளத்திற்காக வரலாற்றுக்கு முந்திய பல செழித்த உயர்ந்த இன அடையாளங்களை ஒழித்துச் சீர்மை என்ற போலிமையை உருவாக்குவது தகாது. அயிரோப்பியக் குழுமியம் போல் ஒவ்வோரினமும் மற்றோரினத்தை மதித்து ஒருவரை ஒருவர் அழிக்கமுயலாமல் ஒற்றுமையாக வாழும் வழியை இந்தியக் குழுமியம் தேடவேண்டும்.
தமிழர்களும் அதே நல்ல எண்ணத்தில் தம் அடையாளப் போராட்டத்தில் வரம்பு மிஞ்சிப்போய் மற்ற மொழி இனத்தாரின் பெருமைகளையும் பண்பாட்டுக்கூறுகளையும் மறுக்கும் எண்ணத்தைக் கைவிடவேண்டும்; வடமொழி மரபோடு பலசிக்கல்கள் இருப்பதால் அந்த வாதாட்டத்தில் உணர்ச்சி பொங்கி வடமொழி மரபிற்கு உரிய சிறப்புகளை மறுக்கும் போக்குக்கூடாது.
அதேபோல் ஏனைய திராவிடமொழிகளோடும் இணக்கம் தேவை. மற்ற 25 திராவிடமொழிகளில் மலையாளம் தவிர மீதி 24 மொழிகள் நேரடியாகத் தமிழ்மொழியினின்று கிளைத்தன அல்ல; அதைப் பாரித்து உரைப்பதும் குற்றமாகும். செந்தமிழ்மொழி மூலத்திராவிடமொழியோடு (Proto-Dravidian) மிகவும் நெருக்கமானது, மற்ற எல்லாத் திராவிடமொழிகளையும் விட; செந்தமிழ்மொழியின் பெரும்பெரும்பாலான கூறுகள் மூலத்திராவிடமொழியினின்றும் அப்படியே இருப்பவை. மூலத்திராவிடமொழி பேசியது ஏறக்குறைய கிமு 3000 என்பது உருசிய மொழியியல்அறிஞர் ஆன்றுரோநோவ் (Andronov) கணிப்பு. ழகாரம் தமிழ்-மலையாளம் மட்டும் காக்கிறது; பலப்பல முழுச்சொற்கள் (ஒன்று, இரண்டு, நாலு, ஏழு, எட்டு, அங்காடி, கழுதை) அப்படியே ஐயாயிரம் ஆண்டுகள் பழையன. மேலும் உலகில் 2300 ஆண்டுகளாகத் தொடர்ந்து வழங்கும் ஒரேமொழி செந்தமிழ்மொழியே; அந்த ஒருமொழியில்தான் இன்னும் பள்ளிக்கூடப் பிள்ளைகள் கூட 1800 ஆண்டுகள் பழைய இலக்கியங்களைத் தாய்மொழிப்பாடத்தில் நேரடியாகப் பயில்கிறார்கள். மற்றமொழியினர் 500 ஆண்டுகள் கூடப் பழைய இலக்கியம் புரிந்துகொள்வது கிடையாது. அதுவே தமிழ்மொழிக்கு உரிய ஒரு பெரிய உலக விந்தையாகும்; அதை அந்த அளவோடு அமைந்து அதைப் போற்றும் வழியை ஆய்வோமாக. அந்தப் பெருமைக்கு உரியோராக நாமும் பெருந்தன்மையோடு ஒழுகுவோமாக.
Share this: